மதுரை: நாகமலை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது துவரிமான் கண்மாய் கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சா போதைப்பொருளை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தக் காரில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் அலி என்ற குஞ்சு (32), முத்தாலிப் (28), நாசர் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 100 கிலோ கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில் இதுபோன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் சம்மந்தப்பட்ட நபர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:கணவர் இறப்பு பற்றி கேட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிப்பு.. போலீசார் விசாரணை..