மதுரை: கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் (59), நாக பாண்டி (27), முனியாண்டி (56), விக்னேஸ்வரன், பழனிவேல், சங்கர் ஆகியோர் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு ஆனது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆறு பேருக்கும் பத்தாண்டுகள் சிறை தண்டனையுடன் ரூபாய் 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறுகையில், இதேபோல் மதுரை மாவட்டத்தில் தாக்கலாகியுள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து புலன்விசாரணை முடித்து உரிய நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விரைந்து தண்டனை வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை வழக்கில் 27 ஆண்டுகளுக்குப்பிறகு குற்றவாளி கைது!