கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசன்ன குமார். இவர் ஓசூர் அடுத்த கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்கு பொருள் வாங்க சென்றிருந்தார்.
பொருள் வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது, இவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அத்திப்பள்ளி போலீசில் பிரசன்ன குமார் புகார் அளித்தார். புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த அத்திப்பள்ளி போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். சிசிடிவி காட்சி பதிவில் ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடிச்சென்றது தெரியவந்தது. வாகனத்தை திருடிய நபர் யார் என்ற விவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 14 ஆயிரம் செல்போன்கள் திருடிய வழக்கு: வெளிநாடு கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு!