கிருஷ்ணகிரி: ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடையில் சமைக்கப்படும் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது. இதனாலேயே தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பிரியாணி வாங்குவது வழக்கம்.
இந்தக் கடையில் ஆர்டர் செய்வோருக்கும் டெலிவரி செய்யும் வசதி உண்டு. இந்த நிலையில், ஒசூரைச் சேர்ந்த கார்த்திக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இந்த கடையில் 4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து பிரியாணியை சாப்பிடும் வேளையில், அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கடை மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் கடையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமி - 10 லட்சம் இழப்பீடு வழங்கும் 7 ஸ்டார் உணவகம்