தமிழ்நாடு காவல்துறை சார்பில் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியை அந்தந்த மாவட்டங்ககளைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். இது நகரத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது மாணவ மாணவிகள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.