கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வன சரகத்திற்கு உள்பட்ட சானமாவு, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் வன உயிரினங்களை கணக்கெடுக்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த வன உயிரின கணக்கெடுக்கும் பணியில் சுமார் 250வன ஊழியர்களும், 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் ஒரு வார காலத்திற்கு ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வனப்பகுதி முழுவதும் எத்தனை வகையான வனவிலங்குகள் உள்ளன. அவைகளின் எண்ணிக்கை எவ்வளவு. எந்த உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன என்றெல்லாம் ஆய்வு மேற்கொண்டு, கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்களும் தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனித - விலங்கின மோதல்: முறையாகப் பின்பற்றப்படுகிறதா வன விலங்கு பாதுகாப்புச் சட்டம்?