கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 908 கன அடியாக உள்ளது. இந்நிலையில் நீர்வரத்து முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோர தொழிற்சாலைகளிலிருந்து சாயன கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக இரண்டு பிரதான கால்வாய்கள் மூலம் திறந்து விடுப்படும் நீரில் ரசாயன கழிவுநீர் கலப்பால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடியில் 39.69 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குமரி முக்கடல் சங்கமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்