ETV Bharat / state

ஒசூரில் ஒற்றைக் காட்டு யானையால் பீதி - கிருஷ்ணகிரி செய்திகள்

ஒசூர் அருகே கிராமப்புறப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஓசூரில் ஒற்றை காட்டு யானையால் மக்கள் அச்சம், கிருஷ்ணகிரி யானை செய்திகள், ஓசூர் யானை, hosur elephant
ஓசூர் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானை
author img

By

Published : Nov 29, 2021, 9:26 AM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து அருகே உள்ள கிராமப் பகுதிகளில் வேளாண் பயிர்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை நேற்று (நவம்பர் 27) மாலை கொல்லப்பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது யானையைப் பார்த்த கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒசூர் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றைக் காட்டு யானை

கிராமத்தின் அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதைப் பார்த்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்துவந்த வனத் துறையினர் காட்டு யானையை கிராம மக்கள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்ததால், மக்களும் பயணிகளும் நிம்மதியடைந்தனர்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்ட வனத்துறையினர்: பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.