ETV Bharat / state

ஆந்திர போலீஸ் அத்துமீறலால் தவிக்கும் பழங்குடியினர்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை

author img

By

Published : Jun 21, 2023, 11:17 AM IST

கிருஷ்ணகிரியில் பழங்குடியின மக்களைத் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆந்திர போலீஸார் அவர்களை மிகக் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விசாரணையின் பேரில் அத்துமீறலில் ஈடுப்பட்ட ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விசாரணையின் பேரில் அத்துமீறலில் ஈடுபட்ட ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி: ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம் கல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஐயப்பா கும்பல் தான் திருடியதாக கூறிய சித்தூர் மாவட்டம், புத்தாலப்பட்டு போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான ரேணுகா (வயது 35), தமிழரசன் (வயது 20), அருணா (வயது 27), கண்ணம்மாள் (வயது 65), ஸ்ரீதர் (வயது 7), சத்யா (வயது 40), ரமேஷ் (வயது 55), ராகுல் (வயது 5), ஐயப்பன் (வயது 45), பூமதி (வயது 24) உள்பட 10 பேரை கடந்த 11ஆம் தேதி இரவில் ஆந்திரா போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர்.

திருட்டு வழக்கில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசார் அழைத்துச் சென்றதாகவும், ஆனால் இந்த திருட்டில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், தமிழ்ப் பழங்குடியின குறவன் சங்கம் சார்பிலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: திருட்டு வழக்கில் டார்ச்சர்... தமிழர்களை தாக்கியதாக ஆந்திர போலீசார் மீது வழக்கு!

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் புகாரின் பேரில் மீட்டனர். ஆனால் பூமதி, ஐயப்பன் ஆகிய இருவரையும் இன்னும் மீட்கப்படாமல் ஆந்திரா மாநில காவல் நிலையத்திலேயே உள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசாரால் உடலில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கொடூரமாகத் தாக்கப்பட்டு வன்கொடுமை ஆளாக்கப்பட்டும், மேலும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இரண்டு பெண்களுக்கு ஆந்திர மாநில போலீசார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, குற்றச்செயலில் ஈடுபடாத எங்கள் உறவினர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ஆந்திர மாநில போலீசார் தாக்கியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலீஸார் பிடியிலிருக்கும் பூமதி, ஐயப்பன் ஆகியோரை விடுவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்து உள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 26 ஆம் தேதி சித்தூரில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.