கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரட்டனப்பள்ளி அருகேயுள்ள மேல் கரடிகுறி கிராமத்தில் மாபெரும் எருது விடும் போட்டி நடைபெற்றது. இந்த எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உட்பட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்தும் 320 எருதுகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலமாகத் தீவிர மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டது. பின்னர் கிராமத்தின் மையப்பகுதியில் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைத்து, வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த எருதுகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் பிடிக்க முயன்றனர்.
அதில், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்த எருது உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் எருது விடும் விழாவின் போது எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்படுகளை வரட்டனப்பள்ளி கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
இதையும் படிங்க:பிரஷாந்த் கிஷோர் மீது பாய்ந்த '420' வழக்கு