கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ராஜா சிட்டி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சக்திவேல். இவர் தனியார் தொழிற்சாலையில் ஆடைகளை சலவை செய்து தரும் தொழில் செய்து வருகிறார்.
நேற்றிரவு (ஜனவரி 9) இவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். வீட்டிலிருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்த போது, அவரது இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ஓசூா் ஹட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.50க்காக மனைவியைக் கொன்ற கணவன்