தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா உத்தரவின்படி இராயக்கோட்டை காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், மஞ்சுநாதன் மற்றும் காவலர்களுடன் மது விலக்கு தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திம்ஜேப்பள்ளி கிராமத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஊரல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சிய திம்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் நடேசன் (37), நாகப்பன் என்பவரின் மகன் எல்லேசன் (32) ஆகிய இருவரையும் இராயக்கோட்டை காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் சாராயம் மற்றும் 25 லிட்டர் ஊரலைக் கைப்பற்றி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘கரோனாவை விரட்ட ஒத்துழையுங்கள்’ - கிருஷ்ணகிரி எஸ்.பி.