ETV Bharat / state

'மத்தியிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை அமமுக உருவாக்கும்' - டிடிவி தினகரன் உறுதி! - தேர்தல் வெற்றி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் 40 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்தான், தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள் என்று கிருஷ்ணகிரியில் நடந்த பரப்புரையின் போது டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : Mar 30, 2019, 10:58 PM IST

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே அமமுக வேட்பாளர் கணேசகுமாரை ஆதரித்து தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

அமமுக கட்சி நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கின்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. தனியாக நான் கட்சி தொடங்கினால், நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டம் நடத்த முடியாது என்கிற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

அமமுக சேர்ந்த 40 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள்தான், தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள். அமமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரைவட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் பரப்புரை

ஜாக்டோ-ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின்கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும், என்றார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே அமமுக வேட்பாளர்
கணேசகுமாரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர்
பேசுகையில், அமமுக கட்சி நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்கின்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை.
தனியாக நான் கட்சி தொடங்கினால், நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய
உரிமை போராட்டம் நடத்த முடியாது என்கிற காரணத்தால் தான் அம்மா மக்கள்
முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன். அமமுக சேர்ந்த 40 மக்களவைத் தொகுதி
வேட்பாளர்களும், 18 சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் போட்டியிடும் 18
வேட்பாளர்கள் தான், தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு
வரபோகிறார்கள். அமமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே வரவேற்பை
பெற்றுள்ளது. இதில் தேசிய, கூட்டுறவு வங்கிககளில் வாங்கிய அனைத்து விவசாய
கடன்கள், மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார்
நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை
வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் இல்லாத
கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழாய் கிணறுகள்
அமைக்கப்படும். ஜாக்டோ & ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின்
கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலங்களில் அனைத்து
சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உட்பட
அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்
உதவித்தொகையும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்
என்றார்.
Videos on mojo

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.