கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியிலிருந்து 35 காட்டு யானைகள் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளது.
25 காட்டு யானைகள் ஒருபக்கம், 7 காட்டு யானைகள் ஒருபக்கம், இரண்டு, ஒன்று காட்டு யானைகள் ஒருபக்கம் என யானைகள் தனித்தனியாக பிரிந்து கும்பலாக ஊருக்குள் சுற்றித்திரிகிறது.
இதனால், பொதுமக்கள் கவனத்துடன் வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓசூர் வனத் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அஞ்சலகிரி, உத்தனப்பள்ளி, சுரலபள்ளி, சானமாவு, பிஜே பள்ளி, ராமாபுரம் குக்கல பள்ளி உள்ளிட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் காவல் இருப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கும்பலாக திரியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வன அலுவலர் நாகராஜ் தலைமையிலான 15 வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யானைகள் நடமாட்டம்: சத்தியமங்கலம் பகுதியினருக்கு எச்சரிக்கை