ETV Bharat / state

கொலை வழக்கில் பிணையில் வந்தவர் கல்லால் அடித்துக் கொலை - One dies mysteriously in Krishnagiri

கிருஷ்ணகிரி: மனைவியை கொலை செய்த வழக்கில் பிணையில் வந்த நபர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder
author img

By

Published : Dec 29, 2019, 11:15 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). இவர் சந்தேகத்தின் பேரில், தனது மனைவி கஸ்தூரியை கொலை செய்த வழக்கில் சிறைச் சென்றார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் பிணையில் வெளியே வந்த கோவிந்தராஜ், இன்று மாலை கிராமத்தின் அருகே உள்ள மாந்தோப்பில் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பர்கூர் காவல் துறையினர் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக கோவிந்தராஜ், அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை அரிவாளால் வெட்டியதைத் தொடர்ந்து காயமடைந்த அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நபரின் உறவினர்கள்தான் கோவிந்தராஜை கொலை செய்திருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: மஞ்ச பைக்கு பதிலாக பெண்களின் கைப்பை! அதிர்ந்து போன சுயேட்சை வேட்பாளர்!

Intro:போச்சம்பள்ளி கொலை தொடர்பான செய்தி தொடர்ச்சிBody:போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவரை கற்களால் தாக்கி கொலை. கடந்த 19.05.2019 அன்று சந்தேகத்தின் பேரில் மனைவி கஸ்தூரியை கொலை செய்துவிட்டு ஜாமினில் இருந்து வரும் நிலையில் இன்று மாலை கிராமத்தின் அருகே உள்ள மாந்தோப்பில் கொலையுண்டு கிடந்தார். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் குறித்து பர்கூர் போலீசார். விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மனைவியை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் .இந்த நிலையில் அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரிடம் தகராறு செய்ய சென்று அவரை அரிவாளால் வெட்டினார் .அவர் தற்போது சீரியஸ் கண்டிஷனில் உள்ளார் .இந்த விவகாரத்தில் அந்த நபரின் உறவினர்கள் இவரை கல்லால் அடித்துக் கொன்று அந்தப் பகுதியிலுள்ள மாந்தோப்பில் போட்டு சென்று விட்டனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.