ETV Bharat / state

தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்தவரை கொலை செய்த விவசாயி! - ஓசூர்

முன்விரோத காரணத்தால் தெருக்கூத்து பார்த்து விட்டு வந்தவரை கத்தியால் குத்திக்கொலை செய்த விவசாயி போலீசில் சரணடைந்தார்.

The farmer killed the person who left after watching street theatre
தெருக்கூத்து பார்த்து விட்டு வந்தவரை கொலை செய்த விவசாயி..!
author img

By

Published : Jan 26, 2023, 10:31 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த ராமச்சந்திரன் கிராமத்தைச் சேர்ந்தவர், அப்பையப்பா(55). இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவ்வப்போது இவரது விளைநிலத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருடுபோனதால், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முன்விரோதம் இருந்தது.

இதனால் அப்பையப்பா, சரியான தருணம் கிடைக்கும்போது கிருஷ்ணப்பாவை பழி தீர்க்க காத்திருந்தார். இந்நிலையில் நேற்று இராமச்சந்திரன் கிராமத்தில் தெருக்கூத்து நடந்துள்ளது. தெருக்கூத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு 3.30 மணியளவில் கிருஷ்ணப்பா திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணப்பாவை உன்னிடம் தனியாக பேச வேண்டுமென அப்பையப்பா விளைநிலத்திற்கு தனியாக அழைத்துச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, வயிறு பகுதிகளில் குத்தியதுடன் தலை மீது கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார்.

இன்று காலை, கிருஷ்ணப்பா கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரிந்து விசாரணை தொடங்கியதும் அப்பையப்பா பேரிகை காவல்நிலையத்தில் சரணடைந்தார். விளைநிலத்தில் சடலமாக கிடந்த கிருஷ்ணப்பா உடலை மீட்ட பேரிகை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிராங்க் வீடியோ வெளியிட்ட பிராங்க்ஸ்டர் ராகுல் மீது பரபரப்பு புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.