கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 7 தொடர் கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதில், பாகலூர் காவல் நிலையம் அருகே சாப்ஜான் என்ற முதியவர் சொத்துக்காக கொலை செய்யப்பட்டார். சமத்துவபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இந்து மகாசபா மாநில நிர்வாகி நாகராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டட மேஸ்திரி கள்ளக்காதல் விவகாரத்தில் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சூளகிரி அடுத்த ஆத்துமேடு புதினா வியாபாரி ராஜப்பா அதிகாலையில் மார்க்கெட்டுக்கு செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொலை படு செய்யப்பட்டார்.
நஞ்சப்புரம் அருகே மது போதையில் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் மூன்று பேர் பலத்த காயம் பட்டு ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதுபோல குந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி நாகலட்சுமி (45) வீட்டில் மேல் மாடியில் மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
மேலும் திருட்டு சம்பவங்கள் மற்றும் ஆள்கடத்தல் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே குற்றச் சம்பவங்களை தடுக்க மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஓசூா் பகுதியில் கூடுதல் காவலர்களை நியமனம் செய்யவேண்டும் எனப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் சைபர் குற்றங்கள் 75 விழுக்காடு உயர்வு!