ETV Bharat / state

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு! - தென்பண்ணை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் பலி!

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரில் மூழ்கி இரண்டு நாட்களில் நான்கு பேர் உயிழந்துள்ளனர்.

Krishnagiri
author img

By

Published : Oct 6, 2019, 7:32 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று முன்தினம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவரது சடலம் இன்னும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார்.

அதே போல் ஆயுத பூஜைக்காக பூ வாங்கச் சென்ற ஈரோடு மாவட்டம் அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (36), தனது மகன் முகில்(8) உடன் உத்தனப்பள்ளி அருகேயுள்ள ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்திற்குக் கீழ் சென்றபோது இருவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Krishnagiri Thenpennai River Four People Drown in Deadஆற்றில் மூழ்கிய மாணவன் குருமூர்த்தி

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற இராயகோட்டை தீயணைப்புத் துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல், இம்மாதம் 1ஆம் தேதி வரையிலான எட்டு நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி தந்தை மகன் பலி!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 2 நாளில் 4 பேர் பலிBody:கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 2 நாளில் 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிக அளவில்
தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர்
பெருக்கெடுத்து ஓடுகிறது. சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று
தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி ஆற்றில் அடித்து
செல்லப்பட்டு பலியானார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.
நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம்
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை
பலியானார். அவர் யார் என தெரியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளி உள்வட்டம் உலகம் தரப்பு ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திற்கு கீழே ஆயுத பூஜைக்காக பூ வாங்க வந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி கிராமத்தை சேர்ந்த பாலாஜி த/ பெ நஞ்சப்பன் வயது 36 என்பவர் தனது மகன் சிறுவன் முகில் த/ பெ பாலாஜி( வயது-8) உடன் கைகழுவும் போது தவறி விழுந்து ஆற்றில் அடித்து சென்ற சிறுவனை காப்பாற்ற சென்ற தந்தையும் அடித்து செல்லப்பட்டார். ராய கோட்டை தீயணைப்புத் துறையின் மூலம் பிரேதத்தை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த
தந்தை & மகன் சூளகிரி அருகே ராமாபுரத்தில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி
பலியாகி உள்ளனர். நேற்று, இன்று என 2 நாளில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 4
பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 24ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல், இந்த மாதம் 1ந் தேதி வரை 8
நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ,
மாணவிகள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 15 பேர் பலியாகி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.