ETV Bharat / state

கல்லூரி மாணவியைக் கடத்த முயற்சி - டிராவல்ஸ் அதிபர் உட்பட ஆறு பேருக்கு வலைவீச்சு! - சூளகிரி அருகே கல்லூரி மாணவியை கடத்த முயற்சி

கிருஷ்ணகிரி: பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட ஆறு பேர் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sulakiri kidnap issue
sulakiri kidnap issue
author img

By

Published : Dec 18, 2019, 12:52 PM IST

சூளகிரி அருகே உள்ள புலியரசி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த ஆறு பேர் அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

அப்போது அந்தக் காரை பொது மக்கள் விரட்டிச் சென்றனர். இதில் மாணவியை இறக்கிவிட்டுவிட்டு, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவியைக் கடத்த பெங்களூருவைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கார்த்திக் (25) மற்றும் அவரது கூட்டாளிகள் வந்தது தெரிய வந்தது.

கார்த்திக்கின் பாட்டி வீடு, சூளகிரி அருகே புலியரசியில் உள்ளது. அவர் அடிக்கடி புலியரசிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது மாணவியை பார்த்த அவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். மேலும் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

அப்போது மாணவியின் பெற்றோர், தற்போது மாணவியை திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் கார்த்திக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மாணவியை கடத்தத் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவி கொடுத்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி கார்த்திக், அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

தற்கொலை வழக்கில் திருப்பம்; ஊர்மக்கள் அடித்துக் கொன்றதாக மனைவி புகார்... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Intro:கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம்:
பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு.Body:கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம்:
பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு.

சூளகிரி அருகே உள்ள புலியரசி சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர்
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்
ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி நேற்று கல்லூரிக்கு
செல்வதற்காக பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் இருந்து அந்த மாணவி
கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சொகுசு
காரில் வந்த 6 பேர் அந்த மாணவியை காரில் கடத்த முயன்றனர். அந்த காரை
பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இதில் மாணவியை இறக்கிவிட்டு விட்டு அந்த மர்ம நபர்கள்
காரில் தப்பி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில்
மாணவியை கடத்த முயன்றது பெங்களூருவை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் கார்த்திக்
(வயது 25) அவரது கூட்டாளிகளுடன் வந்தது தெரிய வந்தது.
கார்த்திக்கின் பாட்டி வீடு, சூளகிரி அருகே புலியரசியில் உள்ளது. அவர்
அடிக்கடி புலியரசிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது மாணவியை பார்த்த அவர்
ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் மாணவியின் வீட்டிற்கு சென்று பெண்
கேட்டுள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் தற்போது மாணவியை திருமணம்
செய்து வைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் கார்த்திக் தனது
கூட்டாளிகளுடன் சேர்ந்து மாணவியை கடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரிய
வந்தது.
இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி,
கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து
அவர்களை தேடி வருகிறார்கள்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.