தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சுவிரட்டுக்கு அடுத்ததாக நினைவுக்குவருவது கரும்புதான். பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக கரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விற்பனை அதிகளவு நடைபெறும்.
மாவட்டத்தின் புகளுர், வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தளவாய்பாளையம், நொய்யல், மண்மங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் கரும்பு பயிரிட்டுவருகின்றனர். கரும்பு விவசாயத்திற்கு அமராவதி, காவிரி ஆற்று பாசனத்தின் மூலம் பயன்பெற்றுவருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு இஐடி பாரி சர்க்கரை ஆலைக்குப் பயன்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது, ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்முதல் 150 ரூபாய்வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனை அமோகம்!