ETV Bharat / state

காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சிறப்பு பயிற்சி முகாம்! - தமிழ்நாடு கரோனா செய்திகள்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், கரோனா நேரத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் ஒருமாத காலம் சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்கியது.

Special training camp to reduce the stress of the guards!

author img

By

Published : Aug 4, 2020, 5:44 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் தினந்தோறும், 30 காவலர்கள் வீதம் 30 நாட்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாம், ஒட்டு காவல் நிலையத்திற்கு, இரண்டு காவலர்கள் வீதம் தினந்தோறும் பணியின் போது மனஅழுத்தம் குறைய மேற்கொள்ள வேண்டிய யோகா பயிற்சிகள், கரோனா ஊரடங்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது, கைதிகளிடம் விசாரிக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை விளக்கி கூறப்படவுள்ளது.

மேலும் காவல் உயர் அலுவலர்களின் ஆலோசனைகலும் காணொளி வாயிலாக எழுத்து வடிவில் திறையில் காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்று குறிப்புக்களைப் பதிவு செய்துக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.