கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தனியார் அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நலிவடைந்த தொழில் நிறுவனர்கள், சிறு குறு வியாபாரிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பட்டதாரிகளுக்கான கடன் பெறும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அனைந்திய சோலார் பவர் அசோசியேஷன் தலைவருமான நரசிம்மன் தலைமை தாங்கினார். அதில் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார், அரசு வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டு பட்டதாரிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.
அப்போது பேசிய இந்தியன் வங்கி மேலாளர் பாங்கரன்,"கரோனா காலத்தில் முடங்கிபோன தொழில்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவது குறித்து பொருளாதார வல்லுநர்களை வைத்து இந்திய அரசு ஆய்வு செய்துவருகிறது. அதில் முதல்முதலாக தொழில் முனைவோருக்கான கடன் தொகை எவ்வளவு தேவை என்பதை அவர்களே நிர்ணயம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் வங்கி ஊழியர்களுக்கு நிம்மதியை அளிக்கும் அறிவிப்பு!