ETV Bharat / state

மோடி இந்தியாவின் காஸ்டிலியான வாட்ச்மேன் - ஓசூரில்  சீமான் பேச்சு - ADMK-DMK

கிருஷ்ணகிரி: மோடி இந்தியாவின் காஸ்டிலியான வாட்ச்மேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓசூரில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது விமர்சித்துள்ளார்.

TN Election
author img

By

Published : Mar 29, 2019, 9:17 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாம் தமிழர் கட்சியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மக்களவை வேட்பாளர் மதுசூதனன், ஓசூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் ராஜசேகர் ஆகிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, 'கரும்பு விவசாயி' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சீமான் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக மேடையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் பேசுகையில்:

இந்தியாவை பதற்றமாக்க வைத்து, தேசத்திற்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்பதுபோல் பாஜக மாற்றிவருகிறது. இந்தியாவின் காவலாளி நான் என மோடி பேசுகிறார். இந்திய நாட்டில் இவ்வளவு 'காஸ்ட்லியான வாட்ச்மேன்' கிடைப்பார் என தாம் எதிர்ப்பார்க்கவில்லை.

மோடி காஸ்ட்லியான வாட்ச்மேன்

Intro:Body:

ரமேஷ் ஓசூர் 29.03.19 9942118775

மோடி இந்தியாவின் காஸ்டிலியான வாட்ச்மேன் - ஓசூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் மதுசூதனன், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இராஜசேகர் ஆகிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக மேடையிலேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் பேசுகையில்:

இந்தியாவை பதற்றமாக்க வைத்து, தேசத்திற்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்பதை போல பாஜக மாற்றி வருகிறது எனவும், இந்தியாவின் காவலாளி நான் என மோடி பேசுகிறார் இந்திய நாட்டில் இவ்வளவு காஸ்ட்லியான வாட்ச்மேன் கிடைப்பார் என தாம் எதிர்ப்பார்க்கவில்லை என கிண்டலடித்தார். புல்வாமா தாக்குதல் குறித்து இதுவரை பதிலளிக்காத மோடி, செயற்கை கோளை அழித்திருப்பதாக பெருமிதம் அடைகிறார் இதுவரை, செயற்கோள் இருந்தது தெரியவில்லை என்றும்,

புல்வாமா தாக்குதல் முன்கூட்டியே தெரியவில்லையா என்றால் எதற்காக இவ்வளவு பெரிய பதவிகள், தெரியும் என்றால் என் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். பாஜக 5 ஆண்டுக்கால ஆட்சியில் விவசாயிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்காமல் தேர்தல் நேரத்தில் 6000 செலுத்துவோம் என கூறி 2000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்திருப்பது தேர்தலுக்காக மட்டுமல்லாமல் வேறு எப்படி பார்ப்பது மீதம் 4000 ரூபாய் எப்பொழுது வழங்கப்படும் பதில் உண்டா என்றும்,திமுக மற்றும் அதிமுக நாங்கள் தன் கொள்கைகளுக்கான கூட்டணி என பேசிவருகிறதே என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு:

சாதனைகள் என்று எதுவில்லாமல் கட்சிகளை மாறி மாறி குறைகூறி வருவதாகவும், உதாரணமாக மத்திய அமைச்சரவையில் 18 ஆண்டுகாலம் இருந்த திமுக கச்சத்தீவை மீட்காமல் தற்போது மீட்பதாக அறிக்கை வெளியிடுகிறது, நீட்தேர்வு,மீத்தேன் திட்டங்களை ஆதரித்து கடிதம் எழுதுவிட்டு தற்போது நாடகமாடுவதாகவும், அதிமுகவை ஊழல் அரசு என பாஜக தலைவர் அமித்ஷா பேசினார், மாநில பாஜகவினரும் அதனையே பேசி வந்தனர், தற்போது கூட்டணி அமைத்தபோது தெரியவில்லையா என்றும், கொள்கைக்கான கூட்டணி என்றால், கூட்டணி அமைத்தபோதே கட்சிகளின் கொள்கை இல்லாமல் போய்விட்டதாகவும், கூட்டணி என்பது லாபத்திற்காகவும் பதவிக்காகவும் என்பதால் நாம் தமிழர் கூட்டணியில் பங்கேற்காததற்கான காரணம் என கூறினார். இந்த பொதுக்கூட்டத்தில் 300க்கும் மேற்ப்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.