கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்காக வந்த 10 வயது மாணவிக்கு பள்ளியின் தாளாளர் குருதத்(60) பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தாளாளர் குருதத்தை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குருதத்தை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
10 வயது மாணவிக்கு பள்ளி தாளாளரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒன்பது வயது சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது!