கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கொள்ளையிட நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள், வங்கியின் பின்புறமாக உள்ள இரும்பு ஜன்னலை உடைத்து உள்ளே நுழைவதற்காக கடப்பாறை, கேஸ் கட்டர் ஆகியவற்றுடன் நுழைந்துள்ளனர்.
அப்போது கொள்ளை கும்பல் சத்தம் வராமல் இருப்பதற்காக கேஸ் கட்டரினால் ஜன்னலை துண்டிக்க முயன்றபோது, வங்கியின் உள்பகுதியில் ஜன்னலில் மாட்டப்பட்டிருந்த கேலண்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீயானது கேஸ் வெல்டர் பகுதியிலும் பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் கேஸ் சிலிண்டர் வெடித்துவிடுமோ என்கிற பயத்தில் கொள்ளை கும்பல் கேஸ் கட்டர், சிலிண்டர், கடப்பாறை உள்ளிட்டவைகளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து அஞ்செட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அருவியில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு!