ETV Bharat / state

ஒப்பந்ததாரரின் ஊழலால் பழுதடைந்த சாலைகள்: கிராம மக்கள் சாலை மறியல்! - சாலை மறியல்

கிருஷ்ணகிரி: தரமற்ற தார்சாலை போட்ட ஒப்பந்ததாரரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
author img

By

Published : Mar 30, 2019, 7:46 AM IST

கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டம்ஊராட்சியில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு தார்ச் சாலை போடப்பட்டுள்ளது.

தார்சாலை போடப்பட்ட ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே பெயர்ந்து வெளியே வருகிறது எனவும், இந்த புதிய தார்சாலைக்கு ஒப்பந்ததாரர் தார் பயன்படுத்தாமல் குருடாயில் பயன்படுத்தியுள்ளார் எனவும், பழையூர் மாரியம்மன் கோயில் அருகே ஏற்கனவே இருந்த கல்வெட்டை இடித்துவிட்டு புதிய கல்வெட்டு அமைக்கப்படாமல் தார்சாலை அமைத்துள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, கிராம ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், தரமற்ற இந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து30க்கும் மேற்பட்டகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தரமற்ற தார்சாலை போட்ட ஒப்பந்ததாரரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டம்  ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்ட தார் சாலை தரமற்ற இருப்பதாக கிராம மக்கள் 30 ற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போச்சம்பள்ளி அடுத்த பாளேதோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளேதோட்டம் கிராமத்தில் இருந்து கல்லாவி வேப்பமரம் சந்திப்பு சாலை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரமும், பாளேதோட்டம் முதல் அரசமரம் வரை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரமும் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது போடப்பட்ட இந்த புதிய தார்சாலைக்கு தார் பயன்படுத்தாமல் குருடாயில் பயன்படுத்தி சாலை அமைக்கப் பட்ட காரணத்தால் ஆங்காங்கே பெயர்ந்து வெளியே வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் பழையூர் மாரியம்மன் கோவில் அருகே ஏற்கனவே இருந்த கல்வெட்டை இடித்துவிட்டு புதிய கல்வெட்டு அமைக்கப்படாமல் தார்சாலை அமைத்துள்ளனர் இதுகுறித்து கிராம மக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் முறையிட்டனர் ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும் அரசமரம் பகுதியிலிருந்து பாளேதோட்டம் செல்லக்கூடிய வழியில் தார் சாலை பழுது ஆகாமலிருக்க சாலையின் குறுக்கே ரோலரை கொண்டு வழிமறித்து பொது மக்கள் மற்றும் வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணம் தடுத்து உள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் காலை முதல் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவர்கள் பள்ளிப்பேருந்து உள்ளே வராத காரணத்தால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர் மேலும் போடப்பட்ட தார் சாலை கைகளிலேயே பெயர்ந்து வரக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தாருக்கு பதிலாக குருடாயில் பயன்படுத்தி தார்சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் உடனடியாக போடப்பட்ட தார் சாலையை எடுத்துவிட்டு புதிய தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

-- 

Visuals on ftp

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.