ETV Bharat / state

'ஈ சால கப் நம்தே' என வாழைப்பழத்தின் மீது எழுதி, தேர் மீது எறிந்து வழிபட்ட தமிழ்நாட்டு ஆர்சிபி ரசிகர்கள்! - தமிழகத்தின் திருப்பதி

ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி, இம்முறை வெல்ல வேண்டி, தமிழ்நாட்டில் வசிக்கும் ஆர்சிபி ரசிகர்கள் வாழைப்பழத்தின் மீது 'ஈ சால கப் நம்தே' என எழுதி தேர் மீது எறிந்து, பிரார்த்தனை செய்தனர்.

'ஈ சலா கப் நம்தே'
ஆர்சிபி, 'ஈ சாலா கப் நம்தே' என வாழைப்பழத்தின் மீது எழுதி தேர் மீது எறிந்து ஆர்சிபி ரசிகர்கள் வேண்டுதல்
author img

By

Published : Apr 3, 2023, 7:08 PM IST

'ஈ சால கப் நம்தே' என வாழைப்பழத்தின் மீது எழுதி, தேர் மீது எறிந்து வழிபட்ட தமிழ்நாட்டு ஆர்சிபி ரசிகர்கள்!

கிருஷ்ணகிரி: இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 தொடர்களில் மும்பை 5, சென்னை 4 என பல அணிகள் வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. அனில் கும்ளே, விராட் கோலி, டூ பிளெஸி என கேப்டன்கள் மாறினாலும் ஆர்சிபி என்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை வெற்றிக் கனியைப் பறிக்கவில்லை.

வருடந்தோறும் ஐபிஎல் தொடர் தொடங்கும் போதெல்லாம் ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சால கப் நம்தே"; ''இந்த முறை கோப்பை எங்களது தான்'' என சொல்லியும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கியும் வருவார்கள். கோப்பை வெல்ல முடியவில்லை என்றதும் ''அடுத்த முறை கப் எங்களது தான்'' என மனதைத் தேற்றிக் கொள்வார்கள். ஆண்டுதோறும் ஏமாற்றத்துடனே ஐபிஎல் போட்டிகளை ஆர்சிபி ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

16ஆவது ஆண்டாக மார்ச் 31இல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி முதல் ஆட்டத்திலேயே மும்பை அணியை அதிரடியாக வென்று, மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் கிராமத்தில் தமிழ்நாட்டின் திருப்பதி என்னும் ''தக்சண திருப்பதி'', வெங்கடரமணசாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து இறைவனை வழிபட்டனர். இக்கோயிலில் மனதில் வேண்டியது நடக்க வாழைப்பழத்தை இறைவன் வெங்கடரமணசாமியின் தேர் மீது எறிந்தால் நடக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், 15 ஆண்டுகளாக ஆர்சிபி கோப்பையைக் கைப்பற்றாததால், இம்முறை வெல்ல வேண்டுமென ஆர்சிபி ரசிகர்கள் வாழைப்பழத்தில் ’’ஆர்சிபி, ஈ சால கப் நம்தே’’ என எழுதித் தேர் மீது எறிந்து வேண்டுதல் நடத்தினர். இந்த வேண்டுதலானது பார்ப்போரை சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: CSK VS LSG: மிரட்டும் லக்னோ.. வெற்றிக் கணக்கை தொடங்குமா Yellow Army?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.