கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியிலிருந்து ஊடேதுர்கம் பகுதிக்கு இன்று (டிச. 2) 12 யானைகள் பெங்களூர் சேலம் ரயில் பாதையில் கடந்து சென்றது.
இதனையடுத்து யானைகள் ரயில் பாதையில் கடக்கும்போது உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் பிரபுவிடம் கேட்டோம். அது குறித்து தெரிவித்த அவர், “இன்னும் மூன்று மாதங்களுக்கு யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது தொடர்ந்து நடைபெறும். யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பதை தவிர்க்க அப்பகுதிகளில் 12 வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவர்கள் ரயில் வரும் நேரங்களில் யானைகள் கடக்க நேரிட்டால் யானைகளை பட்டாசு வெடித்து பாதையை மாற்றிவிடுவார்கள். மேலும் ரயில்வே துறைக்கு இப்பகுதிகளில் வேகம் குறைத்து ரயில்களை இயக்க கடிதம் வழங்கப்படவுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...முல்லைக்குத் தேர் கொடுத்த இம்மண்ணில் மாடப்புறாக்களுக்கு வாழ்விடம் கிடைக்குமா?