கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் முப்பதுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் ஜோதிபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள வயல்பகுதிகளை தனது செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது.
இதனை பார்த்த அனைத்து ஆடுகளும் ஒடின. ஆனால் ஒரு ஆட்டினை பிடித்த மலைப்பாம்பு அதன் உடலைச் சுற்றி நெருக்கியதில் ஆடு உயரிழந்தது.
இதனைப் பார்த்த வெங்கடசாமி கூச்சலிட்டார். இவரின் சத்தத்தைக்கேட்ட கிராமத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் ஓசூர் கோட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து அடர் வனப்பகுதியில் விட பாதுகாப்பாக கொண்டு சென்றனர். உயிரழந்த ஆட்டின் மதிப்பு ரூபாய் 8 ஆயிரம் என வெங்கடசாமி தெரிவித்தார்.