கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்பளம்மா தேவி கோயில் திருவிழா நடைப்பெற்று வருகிறது. மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒருவாரம் நடைபெறும் இத்திருவிழாவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்டு மாடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.
இதில் கர்நாடகா மாநிலம் வைட் பீல்ட்(White field) பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட "பாகுபலி" என பெயிரிடப்பட்ட காளை மாடு அனைவரின் கவனத்தை ஈர்த்து. பொதுமக்கள் ஆர்வத்துடன் பாகுபலி காளையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுவாக நாட்டு இன மாடுகளில் தான் காளை மாடுகள் அதிகம் வளர்க்கப்படும், ஜெர்சி ரக காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக மட்டும் ஒருசிலர் வளர்ப்பது உண்டு.
ஆனால், பெங்களூர், White field பகுதியை சேர்ந்த முரளி(32). இவர் காளைமாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் நிறைந்தவர். இதனால் ஜெர்சி காளை மாட்டினை வளர்க்க வேண்டுமென்கிற நீண்ட நாள் ஆசையால் "பாகுபலி" காளையை வளர்த்துள்ளார். மற்ற மாடுகளை விட பாகுபலி காளையை தூய்மையான பகுதியில் வளர்ப்பதாகவும், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என மாதம் 30,000 ரூபாய் வரை செலவிட்டு வளர்த்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகள் அழைத்து வரப்படுகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பாகுபலி மாட்டினை 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வந்தாலும் நான் விற்க விரும்பவில்லை. எனக்கான அடையாளத்தை பாகுபலி உருவாக்கியுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: பி.வி.சிந்துவின் பள்ளி கால ஆசை? திருச்சி நிகழ்ச்சியில் ஓப்பன் டாக்!