ETV Bharat / state

சுகப்பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்த தாய்: மருத்துவமனையில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pregnant woman dies after childbirth
author img

By

Published : Oct 30, 2019, 12:15 PM IST

Updated : Oct 30, 2019, 3:45 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரது மனைவி பிரியா (24). இவர் பிரசவத்திற்காக பாரூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏதும் ஏற்படவில்லை என்று கூறி தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், தருமபுரி மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் சுகப்பிரசவ முறையில் பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், பிரியா இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் அவரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் பிரசவத்தின்போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதும்தான் இறப்புக்குக் காரணம் என்று தெரிவித்து பிரியாவின் உறவினர்கள் சடலத்தைக் கைப்பற்றி தருமபுரி சேலம் சாலையில் மறியல் செய்ய சடலத்தை வேகமாகத் தூக்கிச் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரியாவின் உறவினர்கள்

இதனையறிந்த தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களிடமிருந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்துசென்றனர். மேலும், உயிரிழந்த பிரியாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெற்றோர் அலட்சியம்: 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்குபின் உயிரிழப்புBody:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்குபின் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(30) என்பவரது மனைவி பிரியா(24) என்பவர் பிரசவத்திற்காக பாரூர் மேம்படுத்தப்பட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பணியில் அங்கு இருந்த மருத்துவர்கள் கர்ப்பிணி தாய்க்கு பிரசவத்திற்கு வலி ஏதும் ஏற்படவில்லை அதனால் தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் இந்நிலையில் தர்மபுரி மருத்துவகல்லூரியில் இன்று விடியற்காலை சுமார் 5 மணியளவில் சுகப்பிரசவம் முறையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கர்பினி பிரியா பிரசவத்திற்கு பிறகு இறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் கர்பினியின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனைமுன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததாகவும் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு கிடந்தவரை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே இறப்புக்கு காரணம் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்_

_இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
Last Updated : Oct 30, 2019, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.