கரோனா நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநிலம் முழுவதும் தீவிர எச்சரிக்கைகளுடன் தளர்வுகள் கொண்டு வந்தது. இதைப்போல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து பிறமாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. வடமாநிலங்களான மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ- பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி வடமாநிலங்களைச் சேர்ந்த, இ பாஸ் இல்லாமல் தமிழ்நாட்டிற்குள் வந்த வாகனங்களை சோதனை செய்தும் தெர்மல் ஸ்கேன் செய்தும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தும் அனுப்பி வைத்தனர். முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும், கூட்டமாக வாகனங்களில் வருபவர்கள் இறக்கியும் விடப்பட்டனர்.
இதையும் படிங்க:ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி!