கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே 20க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் அலைமோதி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக வனப்பாதுகாவலர்களிடம் கிராம மக்கள் யானையின் தொந்தரவு, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், இரண்டு நாட்கள் ஆகியும் வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் யானைக் கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் பயிர்களை மேலும் சேதப்படுத்தி வருகிறது.
ஆகவே இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோத்தகிரி சாலையில் உலாவந்த காட்டுயானை - வாகன ஓட்டிகள் பீதி!