கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அப்துல்கலாம் நகரைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா. அவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மதுபோதையில் அக்பர் பாஷா வீட்டின் முன்பு தள்ளாடி விழுந்துள்ளனர். அதனைப் பார்த்த அக்பர் பாஷா அவர்களிடம் 'நீங்கள் யார்?' எனக் கேட்டு விசாரித்துள்ளார்.
அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகளால் பதிலளிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை அக்பர் பாஷா வீட்டின் மீது எரிந்தனர்.
அதில் அவர் வீட்டின் கதவு, ஜன்னல் சேதமடைந்தது. அதைக் கண்டு தட்டிக் கேட்ட அக்பர் பாஷாவின் மகன் கலாம் பாஷாவை, அவர்கள் கத்தியால் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அதில் கலாம் பாஷா பலத்த காயமடைந்தார்.
அதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது கலாம் பாஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: 'பெண் பயணியிடம் துப்பாக்கி தோட்டாக்கள் - நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவரா என சந்தேகம்?'