ETV Bharat / state

ஓசூரில் 'எம்ஜிஆர் சின்னய்யா' உடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை!

author img

By

Published : Dec 13, 2019, 9:42 PM IST

கிருஷ்ணகிரி: மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு எம்ஜிஆர் வேடமிட்ட தந்தையுடன், மகள் கீதா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

local body election
எம்ஜிஆர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னய்யா (60). எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், அவரைப் போலவே உடை அணிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் 'எம்ஜிஆர் சின்னய்யா' என அனைவராலும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தார்.

அதிமுகவில் நீண்ட நாட்களாகத் தொண்டராக இருந்து வரும் சின்னய்யா, தேர்தல் பிரசாரங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாலும், பல முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், இதுவரை அவருக்கு அதிமுகவில் வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஓசூரில் எம்ஜிஆர் சின்னய்யா உடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை

அதிமுக தலைமை மீது விசுவாசம் கொண்ட இவர், உள்ளூர் அரசியல் தலையீட்டால் சீட் கிடைப்பதில்லை என்கிற விரக்தியில் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தனது மகள் கீதா என்பவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார்.

இன்று கீதா வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, தந்தை சின்னைய்யா எம்ஜிஆர் வேடமிட்டு வந்தது மற்ற வேட்பாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க: 'வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மாற்றம்' - மறுபரிசீலனை செய்ய ஆட்சியரிடம் மனு!

Intro:ஓசூரில், எம்ஜிஆர் வேடமிட்டு வேட்புமனு செய்த சுயேட்சைBody:ஓசூரில், எம்ஜிஆர் வேடமிட்டு வேட்புமனு செய்த சுயேட்சை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னைய்யா(60).
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் அவரை போலவே உடை அணிந்து அதிமுக உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் எம்ஜிஆர் சின்னய்யா என அனைவராலும் பரவலாக அறியப்பட்டு வருகிறார்.

அதிமுகவின் ஆரம்பகால தொண்டராக இருந்து வரும் சின்னய்யா, தேர்தல் பிரச்சாரங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்க கூடியவராக இருந்தாலும், பல முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பியும் இதுவரை அவருக்கு அதிமுக வாய்ப்பளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதிமுக தலைமை மீது விசுவாசம் கொண்ட இவர், உள்ளூர் அரசியல் தலையீட்டால் சீட் கிடைப்பதில்லை என்கிற விரக்தியில்
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தனது மகள் கீதா என்பவரை வேட்பு மனுதாக்கல் செய்ய வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மகளுடன் எம்ஜிஆர் சின்னய்யா, எம்ஜிஆர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்தது மற்ற வேட்பாளர்களையும் வெகுவாக கவர்ந்தது .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.