கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.30) கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பாக கடன் தள்ளுபடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்ட் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் 2ஆவது தளத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிஃப்ட் பழுதாகி நின்றது. இதில் லிஃப்ட்டுக்குள் இருந்த ஏழு பேர் சிக்கிக் கொண்டனர்.
பின்னர் தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சுமார் அரைமணி நேர போராட்டத்துக்குப் பிறகு, லிஃப்டை உடைத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை வெளியேற்றினர்.
இதையும் படிங்க: "நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!