ETV Bharat / state

தலைமை மீது விசுவாசம்: மகளின் வேட்புமனு தாக்கலுக்காக எம்ஜிஆர் வேடம் அணிந்த தந்தை! - Krishnagiri ADMK

கிருஷ்ணகிரி: ஒசூர் சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்று (மார்ச் 19) தனது மகளின் வேட்புமனு தாக்கலுக்காக எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சின்னையா என்பவர் எம்ஜிஆர் வேடம் அணிந்து மகளுடன் வேட்புமனு தாக்கல்செய்தார்.

மகளின் வேட்பு மனு தாக்கலுக்காக எம்ஜிஆர் வேடமிட்ட தந்தை

author img

By

Published : Mar 20, 2021, 11:38 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னைய்யா (61). எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர், எம்ஜிஆர் போலவே வேடம் அணிந்து அதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், 'எம்ஜிஆர் சின்னய்யா' என ஒசூர் சுற்றுப்பகுதி மக்களால் பரவலாக அறியப்பட்டுவருகிறார்.

ஒசூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மகளின் வேட்புமனு தாக்கலுக்காக எம்ஜிஆரின் வேடம் அணிந்து மகளுடன் சென்ற தந்தை

அதிமுகவின் ஆரம்பகால தொண்டராக இருந்துவரும் சின்னய்யா, தேர்தல் பரப்புரைகளில் அனைவரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவராக இருந்தாலும், பல முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பியும், இதுவரை அவருக்கு அதிமுக வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிமுக தலைமை மீது விசுவாசம் கொண்ட இவர், உள்ளாட்சித் தேர்தலில்கூட சீட் கிடைப்பதில்லை என்கிற விரக்தியில் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட, தனது மகள் கீதாவை களமிறக்கி சுயேச்சையாக ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.