கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே அதிமுக மக்களவைத்
தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமி ஆதரித்து தமிழக துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி, பல்வேறு
வளர்ச்சி திட்ட பணிகள் மக்களுக்காக பெற்று தந்து பணியாற்றுபவர். மத்திய,
மாநில அரசு திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு பெற்று தருவார்.
மக்களவைத் தேர்தலில் நல்லவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மெகா, வெற்றி
கூட்டணியை அமைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸ், திமுக மற்றும் சில
உதிரிகட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். காங்கிரஸ் திமுக
கூட்டணியில் ஏற்கனவே மத்தியில் ஆட்சி செய்த போது, திமுக சார்பில் 10
அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களையும்
செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு
வெளியானது. இதனை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா திமுகவிற்கு கோரிக்கை
விடுத்தும் வெளியிடவில்லை. மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற
பிறகு, 2011ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிட்டும்
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் சென்று போராடி காவிரி நடுவர்
மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா
தான். தற்போது மக்களை ஏமாற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியினர் மெதுவாக
சந்திக்க வருகின்றனர். திமுக ஆட்சியில் வன்முறை கலச்சாரம், அப்பாவி ம
க்களின் நிலங்களை நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மறைந்த
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறோம். 2016&ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தினமும்
கலர் கலராக உடையணிந்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்ததர். நடந்தார்,
கரும்புத் தோட்டத்தில் புகுந்தார், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார்.
நாம டீக்கடையே நடத்திருக்குகோம் தெரியுமா. ஸ்டாலின் பிரச்சாரம்
ஏற்படவில்லை. தமிழகத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தீ வைத்து கெ £ளுத்திவிட்டதாக
ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் என்ன தீ பந்தம் கையில் ஏந்தி சுற்றி
வருகிறோமா. மாமன், மச்சான் சண்டையிலே, தினகரன் அலுவலகத்தில் தீ வைத்து
நீங்கள் கொளுத்தினார்கள். 3 உயிரிழப்புகள் ஏற்பட்டு, தற்போது நீதிமன்றம்
தீர்ப்பில் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இது தானே அவர்கள் வன்முறை
கலாச்சாரம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் பேருக்கு 1,000
ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்து வழங்க
இருந்தோம். ஆனால் திமுகவினர் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை
பெற்றுள்ளனர். அந்த தடையை உடைத்தெறிந்து, அந்த தொகையை உறுதியாக வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும். பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு பணம் கேட்ட
கடைக்காரர்களை திமுகவினர் தாக்கினர். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும்
நாங்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறோம்.
தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர் கே.பி.முனுசாமியை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய
வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.
Visuals on mojo