இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர், சமூக சேவை நிறுவனத்திற்கு விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளன.
சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவன விருதுகள் பெறுவதற்கான தகுதிகள்:
- சமூக சேவகர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும்
- 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
- குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் ஈடுபட்டிருக்க வேண்டும்
- பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றிருக்க வேண்டும்
- சிறந்த சமூக சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்
மாநில அளவிலான உயர்மட்டக் குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து விருதுக்கு தகுதியான தனி நபர், நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும். விண்ணப்பதாரர் கருத்துரு (தமிழ் -1 மற்றும் ஆங்கிலம் - 1) மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அறை எண். 21 , கிருஷ்ணகிரி
இந்த விண்ணப்பங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐந்து மணி நேரம் நடனம்... நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்: செவிசாய்க்குமா அரசு?