கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னாரில் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியராக முன்னாள் ராணுவ வீரர் நந்தியப்பன் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை வங்கியின் முன்பு நிறத்துவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். இடைவேளை நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது நந்தியப்பனின் இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சூளகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில், வங்கிக்கு வரும் இளைஞர் ஒருவர், அப்பகுதியில் யாரும் இல்லாததை உணர்ந்து, அங்கிருந்த இருசக்கர வாகனத்தை வேகமாக எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சியை ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் சீருடையை பார்த்தால் மக்களுக்கு மரியாதை வர வேண்டும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்