கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் தெலங்கானா மாநிலம் சம்சாத்பூர் என்னுமிடத்தில் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து, ஓசூர் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 12 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களை 10 நாட்கள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க ஓசூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
இன்றுடன் 10 நாள்கள் காவல் நிறைவடைந்ததால், 7 பேரும் இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி தாமோதிரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சேலம் சிறையில் அடைக்க நீதிபதி தாமோதிரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நகை அடமானக்கடை கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்