கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறைச்சிக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள மூன்று கடைகளில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா தலைமையிலான அலுவலர்கள் பழையபேட்டை பகுதிக்குச் சென்று மூன்று இறைச்சி கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்!