ETV Bharat / state

ரேஷன் கடைக்கு சென்ற விவசாயி சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: ஓசூரில் மாயமான விவசாயி தென்பெண்ணை ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராஜப்பா
author img

By

Published : Jul 15, 2019, 7:45 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காமன்தொட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜப்பா. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு சென்று வருவதாகக் கூறி விட்டு, வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜப்பாவை தேடி வந்தனர். இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில் உடல் அழுகிய நிலையில் ராஜப்பா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அருகில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது.

மாயமான விவசாயி ராஜப்பா

ராஜப்பா முகத்தில் காயம் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள், இது கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாயமான விவசாயி ஆற்றங்கரையில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு
ஓசூர் அருகே காணாமல் போன விவசாயி, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாயமான விவசாயி ஆற்றங்கரையில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு
ஓசூர் அருகே காணாமல் போன விவசாயி, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓசூர் அருகே காமன்தொட்டியை சேர்ந்தவர் ராஜப்பா, 50. விவசாயி; கடந்த இரு தினங்களுக்கு முன் ரேஷன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு, பைக்கில் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி குணம்மா, சூளகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜப்பாவை தேடி வந்தனர். இந்நிலையில், ஓசூர் கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் பின்புறம், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதரில், உடல் அழுகிய நிலையில் ராஜப்பா சடலம் மீட்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றங்கரையில், அவர் ஓட்டி வந்த, பைக் நின்று கொண்டிருந்தது. ராஜப்பா முகத்தில் காயம் உள்ளது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என, சூளகிரி போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சடலத்தை கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது கொலையா? தற்கொலையா? என, விசாரித்து வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.