ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் இருவர் கைது - சிறுமி பாலியல் வன்புணர்வு

அரூர் அருகே சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து அதை புகைப்படம், வீடியோ எடுத்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
arrest
author img

By

Published : Jul 23, 2021, 3:57 PM IST

Updated : Jul 23, 2021, 4:12 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல்லைச் சேர்ந்தவர் அஜித் குமார்(25).

இவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய உறவுக்கார சிறுமியை காதலிப்பதாகக் கூறி, கடந்த சில நாட்களுக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமிக்கு கொலை மிரட்டல்

அவ்வாறு அழைத்துச் சென்ற சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அஜித் குமார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த பெத்தூரைச் சேர்ந்த விஜய் (26), தியாகு (36) ஆகிய இருவரும், அஜித் குமாரை மிரட்டி அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

அதன் பின் விஜய், சிறுமியை மிரட்டி அவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இச்சம்பவத்தை தியாகு தனது செல்போனில் புகைப்படங்கள், வீடியோக்களாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர்.

pocso
கைதானவர்கள்

இருப்பினும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின் இச்சம்பவம் எப்படியோ சிறுமி வசிக்கும் பகுதியில் பரவ அக்கம்பக்கத்தினர் சிலர் சிறுமியிடமே நேரடியாக விசாரித்துள்ளனர்.

சிறுமி தற்கொலை முயற்சி

இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமியை காப்பாற்றிய அவரது தாய், பின் இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த அரூர் மகளிர் காவல் துறையினர், விஜய், தியாகு ஆகிய, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அஜித் குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா வாய்ப்பு: இளம்பெண் பாலியல் வன்புணர்வு?

Last Updated : Jul 23, 2021, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.