கிருஷ்ணகிரி: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி இன்று (மே.25) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைகளை ஆய்வு செய்யும்போது சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்களிடம் தடுப்பூசி போடப்பட்டு வருவது குறித்தும், கரோனா பாதிப்பு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 28 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாகவும், நாளை (மே.26) முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் தெரிவித்தார். குறைகளைக் களையவே தான் ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது இதுவே முதல்முறை எனவும், வேறு எந்த ஆட்சியிலும் இதுபோல் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது இருக்கும் ஒரே எண்ணம் குறைகள் அனைத்தையும் களைந்து மக்களைக் காப்பாற்றுவதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னைக்கு வந்த 2 லட்சத்து 40 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி!