கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ராயக்கோட்டையிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த மினிப் பேருந்து முன்னர் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடனே சக வாகன ஓட்டிகள் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் உட்பட நான்கு பேரை 108 ஆம்புலன்ஸில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லேசான காயங்களுடன் இருந்த 7 பேரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.