கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சுண்டட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் (32). இவர் தனக்குச் சொந்தமான டிப்பர் லாரியை வாடகைக்கு ஓட்டிவருகிறார்.
அவ்வாறு வாடகைக்கு ஓட்டிய பணம் நான்கு லட்சம் ரூபாய்வரை அருகே உள்ள புக்கசாகரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தப்பாவின் குடும்பத்தினர் தரவேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பல மாதங்களாக மஞ்சுநாதன் கேட்டும் பணம் கிடைக்காத நிலையில், இன்று அவர் குடிபோதையில் அரிவாளுடன் புக்கசாகரம் கிராமத்துக்கு சென்று கோவிந்தப்பா வீட்டின் முன்பாக சண்டையிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆபாசமான வார்த்தைகளால் பேசிய மஞ்சுநாத்தை கோவிந்தப்பாவின் இரண்டு மகன்களான திருமலேஷ், நாகேஷ் ஆகியோர் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இதில் முகம், தலையில் வெட்டுப்பட்ட மஞ்சுநாதன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பேரிகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது