ETV Bharat / state

பூட்டியிருந்த வீட்டில் 260 பவுன் தங்க நகைகள் கொள்ளை - man arrested for stealing two hundred gold

ஒசூரில் பூட்டியிருந்த வீட்டில் 260 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

man arrested for stealing two hundred gold

author img

By

Published : May 6, 2021, 7:33 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி எம்.எம் நகரில் வசித்து வருபவர் மாதையன். அரபு நாட்டில் கிரானைட் தொழில் புரிந்து வந்த இவர், கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்தியா திரும்பி குடும்பத்தினருடன் ஒசூரில் தங்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மாதையன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு சென்றிருந்த போது, ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 260 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

இதனையடுத்து, சம்பவ இடத்தை டிஐஜி, கிருஷ்ணகிரி எஸ்.பி பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகர் லூர்துராஜ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்த 260 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டனர். லூர்தூ ராஜ் மீது பெங்களூரு உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தாம்பரத்தில் பணம், பொருள்கள் கொள்ளை !

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.