கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மலசோனை கிராமத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், 'யானை இறப்பு குறித்து மேற்கொண்ட விசாரணையில் காட்டு பன்றியைக் கொல்ல இருவர் வைத்த மின்சார வேலியில் யானை சிக்கிக்கொண்டு உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவான ஒருவரை தேடி வருகிறோம். உயிரிழந்த காட்டு யானை கால்நடை மருத்துவா்கள், மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது' என்றார்.
இதையும் படிங்க:யானை அட்டகாசத்தால் மின்வேலி அமைக்க மக்கள் கோரிக்கை!