கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் முனீஸ்வரர் நகரைச் சேர்ந்த அஞ்சப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் (24). பெங்களூரு கக்கலிபுரா பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரது மகள் சவுந்தர்யா(22). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பாகலூரில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு சவுந்தர்யா சென்றபோது, மஞ்சுநாத்துடன் காதல் வயப்பட்டுள்ளார். காதலர்கள் இருவரும் செல்போனிலும், நேரிலும் பேசிக்கொண்டு காதல் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு, மஞ்சுநாத்தும் சவுந்தர்யாவும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து இன்று(ஜன.4) காலை சவுந்தர்யா பாகலூரில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து உயிரிழந்தார். சவுந்தர்யா இறந்ததை அறிந்த மஞ்சுநாத்தும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று காதலர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு